search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்வா சாத்"

    வடஇந்தியாவில் பெண்கள் தங்களின் கணவரின் நீண்ட ஆயுள் வேண்டி கடைபிடிக்கும் விரதம் கர்வா சாத் ஆகும். இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    கர்வாசௌத் அன்று திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அதைப் பற்றி பல கதைகள் உண்டு. அந்தக் காலத்தில் பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்ததாகத் தெரிய வருகிறது. சூரியனைப் பார்த்து இன்று நீ மறைய வேண்டாம் என்று சொன்னால் சூரியன் அன்று மறையாமல் இருந்ததாக சொல்கிறார்கள்.

    பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். இப்படி பல கதைகள் உள்ளன. கதைகள் பலரை ஊக்குவிப்பதற்காக சொல்லப் பட்டன. ஒரு பெரிய நல்ல காரியத்துக்காக சொல்லப்பட்டன. எனவே கர்வா சௌத் என்பது இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு இன்றியமையாத பண்டிகையாகும்.

    திருமணமான இந்து பெண்கள் தங்கள் கணவனின் நலன் வேண்டி ஒரு நாள் முழுவதும் விரதம் இருக்கும் தினமே 'கர்வா சாத்’ ஆகும்.

    இது இந்தியாவின் வட  மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேய்பிறை தொடங்கிய நான்காவது நாளில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை ' கிருஷ்ண பக்ஷ' என்றும் அழைக்கப்படுகிறது.

    திருமணமாகாத பெண்களும் நல்ல கணவன் வேண்டி இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்.

    ×